இலங்கையில் ஒகி புயலால் பல இடங்களில் கனமழை !

938

இலங்கையில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
இலங்கை அருகே நிலை கொண்டுள்ள ஓகி புயலால், அங்கு கனமழை பெய்து வருகிறது. முக்கிய நகரங்களில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.