இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தொடர் ரன் குவிப்பில் இந்திய அணி!!

765

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது 6-வது இரட்டை சதத்தை விளாசி அசத்தினார்.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி துவக்கத்தில் இருந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதில், சிறப்பாக ஆடிய தமிழக வீரர் முரளி விஜய் 155 ரன்களை குவித்து அசத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ரன்களை குவித்திருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்திலும் இந்திய அணி தீவிர ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதில் அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி தனது 6-வது இரட்டை சதத்தை விளாசி அசத்தினார்.