இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

1747
India's Hardik Pandya, right, watches as teammate Yuzvendra Chahal gestures to their teammates during their first Twenty20 international cricket match against Sri Lanka in Cuttack, India, Wednesday, Dec. 20, 2017. (AP Photo/Bikas Das)

இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்தது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோகித் 17 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டகாரர் லோகேஷ் ராகுல் 61 ரன்களை அதிரடியாக எடுத்தார். தோனி, ஸ்ரேயாஸ், மனிஷ் பாண்டே ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு வலுச்சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 16 ஒவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சஹால் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.