இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக்கோரி,மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!

889

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக்கோரி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் 184 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மீனவர்கள் எவரும் கடலுக்குள் செல்லவில்லை. அனைத்து படகுகளும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.