இலங்கை அணியின் ஒருநாள், டி 20 போட்டிகளின் கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்!

897

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளின் கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இலங்கை அணி தோல்வியை தழுவி வருகிறது. இதையடுத்து அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மாற்றி தோல்வியை தவிர்க்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது. இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் தொடர்களிலும் அடுத்து விளையாட உள்ளது. தொடர் தோல்வியை தவிர்க்க உபுல் தரங்காவிற்கு பதிலாக இலங்கை அணியின் கேப்டனாக திசாரா பெரேரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர்கள் போட்டியில் பெரேரா கேப்டனாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.