இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சமர சில்வாவுக்கு இரண்டு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை..!

431

இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சமர சில்வாவுக்கு இரண்டு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போட்டி ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சில்வா மீது புகார் எழுந்தது. இதையடுத்து சர்வதேச போட்டியில் விளையாட அவருக்கு இடைகால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட சமர சில்வாக்கு தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் மற்ற வீரர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. சமரசில்வா இலங்கை அணிக்காக 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.