இலங்கை அணி கேப்டன் சண்டிமால் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..!

380

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை அணி கேப்டன் சண்டிமால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐசிசி நிராகரித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் சிக்கினார். இதனை ஒப்புக்கொண்ட அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சண்டிமால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த அதிகாரி மைக்கேல் பிலாஃப், மனுவை நிராகரித்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தார். இதன் காரணமாக பார்படாஸில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் சண்டிமால் விளையாட மாட்டார். இதையடுத்து, இலங்கை டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுரங்கா லக்மல் நியமிக்கப்பட்டுள்ளார்.