இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியது சிறிசேனா அரசு. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க நடவடிக்கை

270

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை கண்டுபிடிக்க கடற்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை இலங்கை அரசு அமைத்துள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாகக்கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கை கடல் எல்லையில் நடக்கும் நிலவரம் குறித்து இலங்கை மீனவர்களுக்கு காண்பிப்பதற்காக
நெடுந்தீவு பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை இலங்கை அரசு பொருத்தி உள்ளது.

இந்த கேமராக்களில் பதிவாகும் பதிவுகளை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு பெரிய திரைகளில் போட்டுக்காட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் இருநாட்டு மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று தமிழக மீனவர்கள் எங்கெல்லாம் அத்துமீறி மீன்பிடிக்கிறார்களோ அங்கெல்லாம் கேமராக்களை பொருத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.