ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற யுத்தம் : 90 மனித எலும்புகள் கண்டெடுப்பு

305

இலங்கையின் மன்னார் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 90 மனித எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தது. இந்தப் போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இறுதிப் போரின் முக்கியப் பகுதியாக விளங்கிய வன்னி பகுதியில் ரகசியமாக புதைக்கப்பட்டிருந்த 90 பேரின் எலும்புக் கூடுகள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.