சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 18 பேர் கைது!

250

இலங்கையில் நேற்றிரவு சுற்றித்திரிந்த 18 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 320 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு கருதி, நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. இலங்கைக்கு தற்போது செல்லவேண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை தாக்குதலில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு இலங்கை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், நேற்றிரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த 18 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.