இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

328

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையான ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல் என 8 இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். இந்த கொடூர சம்பவத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 320 பேர் கொல்லப்பட்டனர். நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருந்த இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, ஐ.எஸ். தீவிரவாதி அமைப்பின் தலைவரிடம் வாக்குறுதி அளிக்கும் 8 நபர்களின் காணொலி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ஐ.எஸ். அமைப்பே இணையளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.