முன்னாள் இலங்கை வீரர் ரஸல் அர்னால்டின் டிவிட்டர் பதிவுக்கு இந்திய வீரர் வி.வி.எஸ். லட்சுமண் பதிலடி!

1601

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரஸல் அர்னால்டின் டிவிட்டர் பதிவுக்கு இந்திய வீரர் வி.வி.எஸ். லட்சுமண் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1க்கு 0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரஸல் அர்னால்ட், 5க்கு 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடர் இருக்காது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்டது என்வே அப்படி இருக்காது என்று வி.வி.எஸ் லட்சுமண் வேடிக்கையாக பதிலடி கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலை தளங்களில் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.