இலங்கை ராணுவத்தினர் திடீரென நடுக்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

182

இலங்கை ராணுவத்தினர் திடீரென நடுக்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கச்சதீவை இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதிலிருந்து கச்சத்தீவு இப்போது முழுக்க முழுக்க இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் எல்லைத் தாண்டி கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ராணுவத்தினர் திடீரென நடுக்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஒத்திகையில் ஈடுபட்டதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.