ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில், 196 ரன்களுடன் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

226

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில், 196 ரன்களுடன் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.
இலங்கை – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை, பல்லகெலேயில் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸ் முறையே இலங்கை 117 ரன்களும், ஆஸ்திரேலியா 203 ரன்களும் சேர்த்தன. இதனை அடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2-வது நாள் முடிவில் 2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 6 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இரு நாட்களிலும் மழை காரணமாக தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டத்தில், தொடர்ந்து ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர். முடிவில், 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிய இலங்கை அணியை, இளம் வீரர் குசல் மென்டிஸ் சதம் அடித்து, அணியை சரிவில் இருந்து மீட்டார். 2-வது இன்னிங்சில் இலங்கை 80 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்த போது, மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் 196 ரன்களுடன் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.