தொடர் குண்டு வெடிப்புக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு

320

இலங்கையின் தலைநகர் கொழும்புவில், எட்டு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு.

இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில், ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் உலகையே உலுக்கியுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று அதிகாலை தொடங்கி, எட்டு இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில், ஏறத்தாழ முன்னூறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஈவு இரக்கமற்ற இந்த மிகவும் கொடூரமான சம்பவத்திற்கு, இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என இலங்கையின் மூத்த காவல் துறை அதிகாரி, முன்கூட்டியே எச்சரித்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள இலங்கை அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காட்டிய அலட்சியத்தால் ஏற்பட்ட பேரிழப்பிற்கும், உயிர்ப்பலிகளுக்கும் மன்னிப்பு கோரியுள்ளது.