நியூசிலாந்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி | இலங்கை தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் தகவல்

306

நியூசிலாந்தில் அண்மையில் மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குண்டு தாக்குதல் ஏன் என்றும் அதன் பின்னணி குறித்தும் இலங்கை புலனாய்வுத்துறை அதி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்ட விசாரணையில் நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதல்கள் நடைபெற்று இருப்பதாக இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் நடைபெற்ற தாக்குதலில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக காத்திருந்த 55 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் காட்சிகள் உலகின் அனைத்து இடங்களிலும் வைரலாக பரவியது. தற்போது இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வெளிநாடுகளின் உதவிகள் உள்ளதா என்பது குறித்து புலனாய்வுதுறை விசாரணை நடத்தி வருகிறது.