இலங்கையில் தாக்குதல் நடத்தியவர் என மூவரின் படம் வெளியீடு!

299

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் குழு கொழும்பு விரைந்துள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில், இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் என மூவரின் படத்தை வெளியாகி உள்ளது. அபுல் பாரா, அபுல் முக்தார் மற்றும் அபுல் உபைதா ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் என அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் பொறுப்பாளரான ஸஹரான் ஹாஸின் என்பவரே அபுல் உபைதா என்று அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, குழு ஒன்றை சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர் போல் அனுப்புகிறது. சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது,