இலங்கை : இந்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட 155 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

113

இலங்கையில், இந்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட 155 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை மத்திய மாகாணம், ஹட்டன் மாவட்டத்திலுள்ள பொகவந்தலாவை பகுதியில் இந்திய அரசு உதவியுடன் 155 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து, கிராமத்துறை அமைச்சர் பழனி திகம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.திலக்ராஜ், கே.கே.பியதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இலங்கையில் 63 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக இந்திய அரசு சுமார் 2 ஆயிரத்து 486 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், இந்த நிதியில் இலங்கையில் இதுவரை 47 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.