இலங்கையில் மீண்டும் அமலாகிறது தூக்கு தண்டனை..!

154

இலங்கையில், 42 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தூக்கு தண்டனை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.

இலங்கையில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக தூக்கு தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில், தூக்கு தண்டனை நிறைவேற்றம் மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளோருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகவும், ஐந்து பேருக்கு ஏற்கனவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.