எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் | நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

113

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுவித்துள்ளது.

தமிழக எல்லையில் கடந்த 7 தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து, அவர்களை அனைவரையும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மீனவர்கள் 8 பேரையும் தமிழகத்துக்கே நாடு கடத்த உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலங்கையில் வழக்கு பதிவானாலும் விசாரணை ஏதுமின்றி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார்.

இதற்கு 8 மீனவர்களும் உறுதி அளித்ததின் பேரில் நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர்கள், பொங்கல் பண்டிகைக்குள் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.