நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்

193

இலங்கையில், ரனில் விக்ரமசிங்கே ஆதரவாளர்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் அதிபரின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு. ஜெயசூர்ய அறிவித்தார். இந்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. அப்போது ரனில் விக்ரம சிங்கே மற்றும் ராஜபக்சே எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். பதிலுக்கு ராஜபக்சே எம்.பி.க்களும் கூச்சலிட்டனர். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த மோதலில் ராஜபக்சே தரப்பு எம்.பி. காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூர்யவை ராஜபக்சே தரப்பு எம்.பிக்கள் முற்றுகையிட்டனர். இதனால் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதலை அடுத்து நாடாளுமன்றத்திலிருந்து சபாநாயகர் கரு ஜெயசூர்ய வெளியேறினார்.