இலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு

222

இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. #Srilanka #MaithripalaSirisena

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார். ஆனால் தனது பதவிநீக்கம் சட்டவிரோதமானது எனக்கூறிய ரனில் விக்ரமசிங்கே, தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தினார். இதற்கு மறுத்த அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.

எனவே நாடாளுமன்றம் நாளை கூடும் என அறிவிக்கப்பட்டதை ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் மறுத்தனர். இதனால் வரும் 7 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. பரபரப்பான இந்த சூழலில், இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் தொலைபேசியில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியா கட்டர்ஸ், அங்கு நாடாளுமன்றத்தை கூட்டி விரைவில் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிசேனாவை வலியுறுத்தினார்.