நீதிமன்ற உத்தரவை அடுத்து, 27 மீனவர்களும் சிறையில் அடைப்பு..!

307

இலங்கை சிறையில் அடைபட்டுள்ள 27 ராமேஸ்வரம் மீனவர்கள் காவலை வரும் 24ஆம் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் தேதி, நெடுந்தீவு அருகே, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 27 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, 27 பேரும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மீனவர்கள் 27 பேரும், மீண்டும் விசாரணைக்காக இன்று, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப்பின், 27 பேரின் காவலை வரும் 24ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி சபேசன் உத்தரவிட்டதை அடுத்து, மீனவர்கள் அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.