இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

292

இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து அவர்களின் விசைபடகுகளை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் மட்டும் தமிழக மீனவர்களின் 14 விசைபடகுகளை பறிமுதல் செய்து 61 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் இரட்டைமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சுட்டிக் காட்டியுள்ள மீனவர்கள், இந்த பிரச்சணைக்கு நிரந்தர தீர்வுகான வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.