சபரிமலையில் 18 படி ஏறிய இலங்கை பெண் ஒருவர்

112

சபரிமலையில் 18 படி ஏறிய இலங்கை பெண் ஒருவர், ஐயப்பனை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையைச் சேர்ந்த 46 வயது பெண் பக்தை சசிகலா தன் கணவருடன் வந்து 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவர் 18 படி மட்டுமே ஏறியதாகவும், தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.முறையாக 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க வந்ததாக குறிப்பிட்ட சசிகலா, தனது கர்ப்பப் பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டதாகவும், அதற்கான மருத்துவ சான்றிதழை காண்பித்த பிறகும் தன்னை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை எனவும் கூறினார்.