துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் மாலை 3:30 மணிக்கு தகனம்..!

572

துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை 3:30 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஸ்ரீதேவி குளியல் அறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டது. அவரது இரத்தத்தில், மது கலந்திருப்பதாக இரத்த பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து, அந்நாட்டு சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, ஸ்ரீதேவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், துபாய் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம், மும்பைக்கு இரவு 10 மணியளவில் உடல் வந்து சேர்ந்தது. இன்று காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை CELEBRATION SPORTS CLUB மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் ஸ்ரீதேவியின் உடல், 2 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 3.30 மணியளவில் மின் மயானத்தில், தகனம் செய்யப்பட உள்ளது.