மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி, உத்தரகண்டில் உள்ள கங்கை நதியில் கரைக்கப்பட்டது..!

759

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி, உத்தரகண்டில் உள்ள கங்கை நதியில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய்க்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த மாதம் 28ம் தேதி ஹோட்டலில் குளித்துக் கொண்டிருந்த போது, குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். போதை அதிகமானதால், தண்ணரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது அஸ்தி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் கரைக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அனில் கபூர், அமர்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.