பேட்ஸ்மேன்கள் செய்த தவறே இந்தியா தோல்வியடைந்ததற்கு காரணம் என கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

222

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒரு நாள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி   2 ரன்களில் தோல்வியடைந்தது.   171 ரன் இலக்குடன் களமிறங்கிய  இந்திய அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்,  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.  டோனி கடைசி வரை நின்றும் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் தோனி, இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட வில்லை என்றும் அவர்கள் ஏராளமான தவறுகள் செய்ததாகவும் தெரிவித்தார். இந்திய ஏ அணியில் இருந்து இந்திய அணிக்கு வரும் வீரர்களுக்கு எவ்வாறு நெருக்கடி இருக்கும் என்பதற்கு இந்த தோல்வி ஒரு பாடமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.   இந்தியா -ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நாளை நடைபெறுகிறது.