சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா – அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை..!

313

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா அணி பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை எதிர்த்து விளையாடுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 4 க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30க்கு நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை இந்தியா அணி எதிர்த்து விளையாடுகிறது. நேற்று தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் ஜூலை 1ம் தேதி வரை நடைபெறுகிறது.