இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பதிலடிக்கொடுக்குமா இந்திய அணி?

968

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று மாலை தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில் 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இங்கிலாந்து முனைப்பு காட்டும் என்பதால் இந்திய அணி வீரர்களுக்கு இன்றைய போட்டி சற்று சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.