இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் புகழாரம்..!

215

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லியில் சச்சின் தெண்டுல்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் எனது காலகட்டத்தில் இல்லாத அளவுக்கு தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு நிறைவுடன் காணப்படுகிறது என்றார். இதனை சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணிகளில் ஒன்றாக நான் கணிக்கிறேன் என கூறிய தெண்டுல்கர், எப்பொழுதும் இல்லாத வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர் என கூறினார். தொடர்ந்து பேசிய தெண்டுல்கர் புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என தெரிவித்தார்.