கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதல்..!

290

கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இன்று அரையிறுதி சுற்றுகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ஈரான் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டியில் இந்தியா, தென்கொரியாவுடன் மோதுகிறது. இந்த போட்டிகள் இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. அரையிறுதியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியில் ஈரான் அல்லது பாகிஸ்தனை எதிர்கொள்ளும்