5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் : கொல்கத்தா அணியை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் எப்.சி.

455

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 1க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி நார்த் ஈஸ்ட் எப்.சி. அணி வெற்றி பெற்றது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய போட்டியில், கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் எப்.சி அணிகள் நேற்று மோதின. இதில் இரண்டு அணிகளும் சரிசமமாக விளையாடியதால், முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் சிறப்பாக விளையாடிய நார்த் ஈஸ்ட் எப்.சி. அணி ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் முன்னிலை வகித்த அந்த அணி ஆட்ட நேர முடிவில் 1க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.