20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை..!

396

இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது.

அதன்படி இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி டுப்ளின் நகரில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி, டோனி, தவான், ரோகித் சர்மா, ரெய்னா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் போட்டியில் விளையாடுகின்றனர்.