2026 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர்…. 48 அணிகள் பங்கேற்கும் என அறிவிப்பு

101

2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்க பிஃபா கவுன்சில் இன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
உலகில் உள்ள விளையாட்டு அமைப்புகளில் பிஃபா எனும் கால்பந்து பெடரேஷன் மிக பெரிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும், உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்க இயலும். இதில் போட்டியை நடத்தும் நாடு மட்டும் தகுதிச் சுற்றில் பங்கேற்காமல் நேரடியாக தகுதி பெறும்.32 அணிகள் என்பதால் பெரும்பாலான முன்னணி அணிகளுக்கு இடம் கிடைக்காமல் இருந்தது. இதன் காரணமாக இந்த எண்ணிக்கையை 48 ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான பிஃபா கவுன்சில் கூட்டம் கூடியது.அதில் 48 அணிகள் பங்கேற்க ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த அணி 16 பிரிவுகளாக பிரிக்கப்படும் .