உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன..!

288

ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் – மொராக்கோ அணிகள் மோதுகின்றன. இதில் மொராக்கோ சற்று பலவீனமானது என்பதால் போர்ச்சுகல் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டாவதாக நடைபெறும் போட்டியில் உருகுவே – சவுதி அரேபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பலம் வாய்ந்த உருகுவேயை சமாளிப்பது, சவுதி அரேபியா அணிக்கு சற்று கடினமாக இருக்கும்.

]உலக கோப்பை போட்டியில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கஜன் நகரில் இன்று இரவு நடக்கும் மூன்றாவது ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை ஈரான் அணி எதிர்கொள்கிறது. இதில் ஈரான் அணி வெற்றி பெற்றால் 2-வது சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விடும். ஆனால் ஸ்பெயின் அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.