டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் புனேவில் இன்று தொடக்கம். ஒற்றையர் பிரிவில் யுகி பாம்ப்ரி, ராம்குமார் நியூசிலாந்து வீரா்களுடன் இன்று மோதல்.

221

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானியா குரூப்-1 பிரிவில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று முதல் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவில், இந்திய மூத்த வீரர் லியாணடர் பெயர், தேசிய சாம்பியன் விஷ்ணு வர்தனுடன் இணைந்து ஆடுகிறார். இவர்கள் இணை, நியூசிலாந்தின் ஆர்டெம் சிடாக் – மைக்கேல் இணையுடன் நாளை மோத உள்ளது. இதில் லியாண்டர் பெயர் புதிய சாதனையை நோக்கி அடியெடுத்து வைக்கிறார். இது அவர் பங்கேற்கும் 55 வது டேவிஸ் கோப்பை போட்டியாகும். மேலும் இரட்டையரில் இதுவரை 42 வெற்றிகளை பெற்று இத்தாலியின் நிகோலாவுடன் சமனில் இருக்கிறார். இன்னும் ஒரு வெற்றி பெற்றால், டேவிஸ் டென்னிஸ் வரலாற்றில் இரட்டையரில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இன்றைய முதல் நாள் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி நியூசிலாந்தின் பின் டியர்னியுடனும், தமிழகத்தை சேர்ந்த ராம்குமார், நியூசிலாந்தின் ஸ்டாதமுடனும் மோத உள்ளனர்.