14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

1516

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்க தேச அணியை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாவியில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆப்கான், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டகாரர்கள் சற்று மந்தமாக விளையாடவே, மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சாஹடி, ரஷித் கான் அரைசதம் விளாசவே, ஆப்கான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி, ஆப்கான் வீரர்களின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த 119 ரன்களில் சுருண்டது.

ரஷித் கான், உர் ரஹ்மான், குள்பாடின் நயிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2 விக்கெட் மற்றும் அரை சதம் விளாசிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று முதல் சூப்பர் 4(four) சுற்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்னை எதிர்கொள்ள உள்ளது.