பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், முகுருசாவை வீழ்த்திய சிமோனா ஹாலெப்..!

255

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், முகுருசாவை வீழ்த்திய சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றினார்.

பாரீஸ் நடரில் தொடங்கி நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், 3-ம் நிலை வீராங்கனையான கேப்ரின் முகுருசாவை எதிர்கொண்டார். இதில் முதல் சுற்றை 6க்கு 1 என ஹாலெப் எளிதாக கைப்பற்றினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் பிற்பாதியில் 6க்கு 4 என்ற செட் கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.