சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நுழைவு

288

ஐதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்றில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

மும்பையில் நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய ஐதராபாத் அணி வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் சென்னை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த பிராத்வெய்ட் 43 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து விளையாடிய சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ரெய்னா சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சியளித்தனர். சென்னை அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய டூப்ளசிஸ் 67 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்ற சென்னை அணி ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதிரடியாக விளையாடிய டூ பிளிஸ்சிஸ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.