ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி – 3-வது தகுதி சுற்று

85

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய வீரர் குணேஸ்வரன் தகுதி பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நாளை மறுதினம் மெல்போர்னில் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக, அதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது மற்றும் கடைசி தகுதி சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனும், ஜப்பான் வீரர் யோசுக் வாடானுகியும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சிறப்பாக விளையாடிய குணேஸ்வரன் 6 க்கு 7, 6 க்கு 4, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார்.