மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் : இந்திய அணி 367 ரன்களில் ஆல்அவுட்

800

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 367 ரன்கள் குவித்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐதராபாத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் அந்த அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் ரோஸ்டன் சேஸ்-இன் சதத்தினால், அந்த அணி முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டகாரர் பிரிதிவ் ஷா அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து ரஹானே, ரிஷப் பாண்ட் ஆகியோரும் அரை சதம் கடந்தனர். ஆனால் இவர்களை தொடர்ந்து வந்த யாரும் நிலைக்காததால், இந்தியா 367 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனை தொடாந்து மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்கத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்த அந்த அணி திணறி வருகிறது.