சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி..!

386

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பல்வேறு முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரர் ஜோகோவிச், பிரான்சின் அட்ரியன் மன்னாரினோவை 4-க்கு 6, 6-க்கு 2, 6-க்கு 1 என்ற செட்களில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் முன்னணி வீரர் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிசிகோரியை 6-க்கு 4, 6-க்கு 4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இதே போன்று டிமிட்ரோவ், அலெக்ஸாண்டர் ஜீவெரிவ் உள்ளிட்டோரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.