கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து இறுதிப் போட்டியில் இந்தியா – கென்யா அணிகள் இன்று மோதல்..!

430

கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து இறுதிப் போட்டியில் இந்தியாவும் கென்யாவும் இன்று மோதுகின்றன.

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன. இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கென்யாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணி மீண்டும் கென்யாவை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சுனித் சேத்ரி இந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.