ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றி..!

369

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றுள்ளது.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து-இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இதில் மோனா மேஷ்ராம் அதிகபட்சமாக 32 ரன்களும் மந்தனா 29 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.