கனரக வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு ஜனவரி 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

191

நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு, கடந்த 2015ம் ஆண்டு கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2015ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து கனரக வாகனங்களிலும் 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லாத வகையில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கான காலக்கெடு கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்ததால், மீண்டும் கால அவகாசம் வழங்கக்கோரி லாரி உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதனையடுத்து அக்டோபர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.