விரைவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற இருப்பதால் மத்திய அரசுக்கு 5 கோடியே 60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

196

மிகப்பெரிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு டெண்டர் அளிக்கலாம் என தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டு 60 முதல் 75 நாட்களில் யாருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு 5 கோடியே 60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிகவிலை காரணமாக தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தக் கூடும் என கூறப்படுகிறது.