அமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் திருட்டு !

276

அமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மலேசியா, இலங்கை, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவரது இசைக் குழுவினர் அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடத்தி வந்த நிலையில், அங்கு தங்கியிருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டது. இதையடுத்து, ஹவுஸ்டனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு எஸ்.பி.பி. புகார் தெரிவித்தார். இதையடுத்து, மத்திய அரசின் உதவியுடன் புதிய பாஸ்போர்ட் பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியன் நாடு திரும்பியுள்ளார்.