ஸ்பெயினில் நடைபெற்று வரும் எருது விரட்டும் விழாவில் ஏராளமான இளைஞர்கள்….

306

ஸ்பெயினில் நடைபெற்று வரும் எருது விரட்டும் விழாவில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
ஸ்பெயின் நாட்டின் Pamplona நகரில் ஆண்டுதோறும் பாரம்பரிய விளையாட்டான எருது விரட்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு எருதுவிடும் விழா உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட தெருக்களில் ஓடும் எருதுகளை இளைஞர்கள் பின்தொடர்ந்து விரட்டிச் செல்வர். இரண்டாம் நாள் போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். விரட்டி வந்தவர்களை எருதுகள் முட்டித் தள்ளின. இதில் பலர் காயமடைந்தனர். எருது விரட்டும் போட்டியை ஆயிரக் கணக்கானோர் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.