ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 12-வது முறையாக சாம்பியன்..!

120

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 12ஆவது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், 4-ம் நிலை ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம்மும் பலப்பரீட்சை நடத்தினர். நடாலுக்கு ஈடுகொடுத்து விளையாடிய போதும், அவரது ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் டொமினிக் திம் திணறினார். சுமார் 3 மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற நடாலுக்கு 18 கோடி ரூபாயும், 2-வது இடத்தை பிடித்த டொமினிக் திம்முக்கு 9 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த மைதானத்தில் மொத்தம் 95 ஆட்டங்களில் ஆடி அதில் 93 முறை ரபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.